Recent Posts

Crop Insurance - Pradhan Mantri Fasal Bima Yojana - PMFBY - பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


இயற்கை பேரிடர்கள்(வறட்சி, வெள்ளம், புயல், தீ etc...), பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் பயிர்கள் சேதமடையும் பொழுது விவசாயிகளுக்கு இழப்பை ஈடு செய்வதற்காக காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்கும் பொருட்டு பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வேளாண்மைத்துறையானது பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு நிலையான வருமானம் பெற வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.


பயிர் காப்பீடு செய்வதால் என்ன கிடைக்கும்?

பயிர் சேதம் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப காப்பீட்டு தொகையானது பயனாளர் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். இதனால் பயிர் இழப்பிலும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைவர்கள்.
  • நிலத்தில் குத்தகை முறையில் விவசாயம் செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • விவசாய கடன் பெறுபவர்கள் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் கடன் பெறாதவர்களும் பயிர் காப்பீடு செய்யலாம்.


தேவைப்படும் ஆவணங்கள் யாவை?

    1. ஆதார் அட்டை
    2. வங்கி கணக்குப்புத்தகம்
    3. கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து அடங்கல் சான்று
    4. குத்தகை நிலம் எனில் அதற்கான சான்று


எங்கு விண்ணப்பிப்பது?


பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் அருகிலுள்ள பொது சேவை மையங்கள்(CSC) அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தாமாக முன்வந்து தங்கள் பிரீமிய தொகையை செலுத்தி பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.


காப்பீட்டு தொகை எவ்வளவு?

  • சாகுபடி செய்யும் பரப்பு, அந்தந்த பருவம் மற்றும் பயிரிற்கு ஏற்ப பிரீமிய தொகை மாறுபடும்.
  • விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் அனைத்து கரீப் உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 2% ஆகவும், ரபி உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5% ஆகவும் மற்றும் ஆண்டு வணிக / தோட்டக்கலை பயிர்களுக்கு 5% ஆகவும் உள்ளது.

Comments