Recent Posts

RINN SAMADHAN 2020-2021 - ரின் சமாதானம் - வங்கி கடன் தள்ளுபடி திட்டம் - தவறவிடாதீர்கள்

வங்கி கடன் தள்ளுபடி திட்டம்

வங்கிகளில் பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன் வாங்கி நீண்ட காலமாக திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.


சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீண்ட நாட்களாக திருப்பி கட்ட முடியாமலுள்ள வாரா கடன்களுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி மற்றும் அசல் தொகையில் 90% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. அசல் 20 லட்சம் வரை இருக்குற அனைத்து கடன்களையும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள கடன்கள் உட்பட இந்த திட்டம் மூலமாக முடிவுக்கு கொண்டு வரலாம். இந்த திட்டத்தின் பெயர் "ரின் சமாதானம்(RINN SAMADHAN)".

அனைத்து வங்கிகளிலும் இத்திட்டம் உள்ளது என வங்கி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தாங்கள் கடன் வாங்கிய வங்கியை தொடர்பு கொண்டு தங்கள் கடனை குறைந்த தொகை கொண்டு திருப்பி செலுத்தலாம். அதற்கான தடையின்மை சான்று (NOC) ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களில் வங்கி உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பிறகு வழங்கப்படுகிறது.

கட்ட வேண்டிய தொகை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் பெறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பணமாகவோ காசோலையாகவோ கட்ட வேண்டிய தொகையை ஒரு முறை தீர்வு (OTS) (One Time Settlement) முறையில் திருப்பி செலுத்தலாம்.

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • பான் அட்டை
  • படிப்பு சான்று (கல்வி கடன் எனில்)


ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 2 லட்சம் கல்விக்கடன் வாங்கி பத்து வருடங்களுக்கு மேலாக கடன் கட்ட முடியமால் இருந்து வந்தார். தற்போது அவர் 40000 மட்டும் செலுத்தி தன்னுடைய கடன் கணக்கை முடித்து கொண்டார். மற்றோருவர் 25000 மட்டும் செலுத்தி தனது கணக்கை முடித்து கொண்டார். இது உண்மையில் நடந்த நிகழ்வுகள்.

ஒவ்வொரு கடனாளிக்கும் அவரது கடன் தொகைக்கு ஏற்ப திருப்பி கட்ட வேண்டிய தொகை மாறுபடும். கட்ட வேண்டிய தொகை, வாரா கடனாக உள்ள காலம் போன்ற சில காரணிகளை கொண்டு ஒருவர் கட்ட வேண்டிய தொகை கணக்கிடப்படுகிறது. கட்ட வேண்டிய தொகையானது வங்கி மேலாளர் கணக்கிட்டு தெரியப்படுத்துவார்.

இந்த திட்டம் மார்ச் 2021 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். இந்த செய்தியை மற்றவர்களும் பயனடைய பகிருங்கள்.

Comments