Recent Posts

CHIEF MINISTER UZHAVAR PATHUKAPPU THITTAM - உழவர் அட்டை விண்ணப்பித்தல்/புதுப்பித்தல் எப்படி? - முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - உழவர் அட்டை விண்ணப்பித்தல்/புதுப்பித்தல் எப்படி?


முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்பது வருவாய்த்துறையின் உழவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பதிவுபெற்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அரசின் உதவி தொகைகளை பெறலாம்.

உழவர் அட்டை பெறுதல்/புதுப்பித்தல் எப்படி?

இத்திட்டத்தில் பதிவுபெற்ற உழவர்களுக்கு உழவர் அட்டை வழங்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தனி வட்டாச்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது புதிய உழவர் அட்டை வழங்கப்படுவதில்லை. புதுப்பித்தல் வசதியும் இல்லை.

பயன்கள்

  • கல்வி உதவி தொகை - தொழில் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பட்டப்படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை, தொழிற்கல்வி போன்ற படிப்புகளுக்கு ஆண்டொன்றுக்கு ஒருமுறை உதவித்தொகை பெறலாம்.
  • திருமண உதவி தொகை பெறலாம்.
  • இயற்கை/விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகை பெறலாம்.
  • கை கால் இழப்பு அல்லது கண் பார்வை இழப்பு அல்லது பக்கவாதம் அல்லது தற்காலிக இயலாமை (காசநோய்,  புற்றுநோய், இதயநோய், நரம்பியல் நோய், எலும்பு முறிவு) போன்றவைகளுக்கு உதவி தொகை பெறலாம்.
  • அறுபது வயதை கடந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் ஓய்வுதியம் பெறலாம்.



தகுதிகள்

  • அரசு ஊழியர்களாக இருக்க கூடாது.
  • உழவர் அட்டை வைத்திருத்தல் வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. குடும்ப அட்டை
    2. வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம்
    3. உழவர் அட்டை
    4. ஆதார் அட்டை


விண்ணப்பிக்கும் முறை

  • கல்வி உதவித்தொகைக்கு கல்வியாண்டு தொடங்கி ஆறு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்/ வருவாய் ஆய்வாளர்/வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம்.
  • திருமண உதவி தொகைக்கு திருமணத்திற்கு முன்பு மூன்று மாதத்திற்குள் அல்லது திருமணத்திற்கு பின்பு ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இயற்கை/விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகைக்கு இறப்பிற்கு பிறகு ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கை கால் இழப்பு அல்லது கண் பார்வை இழப்பு அல்லது பக்கவாதம் போன்றவைகளுக்கு விபத்து ஏற்பட்ட ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேற்படி உதவி தொகைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள்ளாக மனு செய்து நிவாரணம் பெற இயலாத நேர்வுகளில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக மூன்று மாதம் வரை), மாவட்ட வருவாய் அலுவலர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக ஆறு மாதம் வரை), மாவட்ட ஆட்சியர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக ஒரு வருடம் வரை) போன்ற அலுவலர்களிடம் மனு செய்து காலதாமத்தை ஏற்றுக்கொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Comments