Recent Posts

MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR NINAIVU MARRIAGE ASSISTANCE SCHEME - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


இத்திட்டத்தில் விண்ணப்பதாரராக  மணமகளின் தாய் அல்லது மணமகளின் தந்தை அல்லது மணமகள் (இருவரும் இறந்திருந்தால்) இருக்கலாம். திருமண நாளிலிருந்து 40 நாட்கள் முன்பிருந்து திருமணத்திற்கு முதல் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயன்கள்

  • மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தாய் (அ) தந்தைக்கு திருமண செலவிற்காக ரூ.25,000/-க்கான காசோலை மற்றும்  திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது. 
  • மணமகள் பட்ட படிப்பு / பட்டய படிப்பு முடித்திருந்தால் தாய் (அ) தந்தைக்கு திருமண செலவிற்காக ரூ.50,000/-க்கான காசோலை மற்றும்  திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.


தேவையான தகுதிகள்

  • மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்
  • பழங்குடியினர் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது
  • ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள்  இருக்க வேண்டும்
  • மணமகள் 18 வயதும் மணமகன் 21 வயதும் திருமண நாளன்று பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
  • குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே
  • அரசு பணியில் இருக்க கூடாது


தேவையான சான்றுகள்


    1. திருமண அழைப்பிதல்
    2. சாதிச் சான்றிதழ்
    3. குடும்ப அட்டை (மணமகள்) அல்லது இருப்பிட சான்றிதழ் 
    4. மணமகள் மற்றும் மணமகனுடைய மாற்று சான்றிதழ் (TC) அல்லது பிறப்பு சான்றிதழ்
    5. பெற்றோரது வங்கி கணக்கு முதல் பக்கம்
    6. மணமகள் 10ஆம் வகுப்பு வரை பயின்று அரசு தேர்வில் தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்ததற்கான சான்று (பள்ளி மாற்று சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று) (அல்லது) மணமகள் பட்டம் பெற்றவராயின் அதற்கான சான்று (Provisional & Convocation)
    7. வருமானம் சான்றிதழ்
    8. மணமகள், தாய் (அ) தந்தை மற்றும் மணமகன் புகைப்படங்கள்
    9. கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
    10. மணமகள் மற்றும் மணமகனுடைய ஆதார் கார்டு
    11. மேலும் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படின் (திருமணம் பதிவு செய்த சான்று, இணைப்பு ஒப்புதல் பத்திரம், மணமகள், மணமகன், சாட்சிகள் வாக்குமூலம், இருவருக்கும் முதல் திருமணத்திற்கான சான்று (V.A.O), உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெறவில்லை என சான்று (V.A.O))


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (Common Service Centre) அணுகவும்.


சேவை கட்டணம் - ரூ.  120 /- 


பரிசீலிக்கப்படும் இடம்.

விண்ணப்பமானது விண்ணப்பதாரர் கிராம ஊராட்சியில் வசித்தால் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கும் பேரூராட்சி மற்றும் நகராட்சியில் வசித்தால் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும்


பரிசீலனை செய்யும் அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவகம்
(Block Development Office)
மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம்
(District Social Welfare Office)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்படும் இடம்)

Comments