Dr. DHARMAMBAL AMMAIYAR NINAIVU WIDOW RE-MARRIAGE ASSISTANCE SCHEME - டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் விண்ணப்பதாரராக மணமகள் இருக்கலாம். திருமண நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயன்கள்
- மணமகள் படிக்கவில்லை எனில் மணமகளுக்கு திருமண செலவிற்காக ரூ.25,000/-க்கான காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.
- மணமகள் பட்ட படிப்பு / பட்டய படிப்பு முடித்திருந்தால் மணமகளுக்கு திருமண செலவிற்காக ரூ.50,000/-க்கான காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.
தேவையான தகுதிகள்
- வருமான உச்சவரம்பு இல்லை
- மணமகள் குறைந்தபட்சம் 20 வயதும் மணமகன் அதிகபட்சம் 40 வயதும் திருமண நாளன்று பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
- அரசு பணியில் இருக்க கூடாது
தேவையான சான்றுகள்
- திருமண அழைப்பிதல் (முதல் திருமணம் மற்றும் மறுமணம்)
- விதவை சான்றிதழ்
- குடும்ப அட்டை (மணமகள்) அல்லது இருப்பிட சான்றிதழ்
- மணமகள் மற்றும் மணமகனுடைய வயது சான்றிதழ்
- தம்பதியரின் திருமண புகைப்படம்
- வங்கி கணக்கு முதல் பக்கம்
- மணமகள் பட்டம் பெற்றவராயின் அதற்கான சான்று (Provisional & Convocation)
- மணமகள் மற்றும் மணமகன் புகைப்படங்கள்
- கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
- மணமகள் மற்றும் மணமகனுடைய ஆதார் கார்டு
- மேலும் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படின் (திருமணம் பதிவு செய்த சான்று, இணைப்பு ஒப்புதல் பத்திரம், மணமகள், மணமகன், சாட்சிகள் வாக்குமூலம்)
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks