Recent Posts

Government Insurance Schemes for people of Tamil Nadu | தமிழக மக்களுக்கான அரசு காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்

 தமிழக மக்களுக்கான அரசு காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்

மத்திய அல்லது மாநில அரசுகள் மக்களின் நலன்களுக்காக பல்வேறு ஆயுள், மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சாதாரண மக்களும் குறைந்த செலவில் நல்ல மருத்துவ மனைகளில் தரமான மருத்துவம் மற்றும் மருத்துவ வசதிகளை பெற முடியும். கீழ்கண்ட காப்பீடு திட்டங்கள் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு தர கூடியவை.

 


பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)

இத்திட்டத்தில் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எனில் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர். இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீடு இறுதி தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கபடுகிறது. இந்த திட்டத்திற்கான பிரீமியம் வங்கி/அஞ்சலக கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதியுடன் உள்ளது. 

இத்திட்டத்தில் வருடத்திற்கு ரூ. 330 செலுத்தினால் போதுமானது. ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வசதியுமுள்ளது. இந்த  திட்டத்தில் சேர அருகிலுள்ள வங்கி கிளை / காப்பீட்டு அலுவலகம் / அஞ்சல் அலுவலகத்தை அணுகவும். மேலும் விபத்து / இறப்பு நேர்ந்த பிறகு 30 நாட்களுக்குள் உரிமை கோரல் செய்யப்பட  வேண்டும்.


பிரதான் மந்திரி சுரக்ஷா  பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)

இந்த திட்டம் இந்திய மக்களில் 20% பேருக்கு மட்டுமே விபத்துக்களுக்கான காப்பீட்டுத் தொகை உள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் இந்திய குடிமக்களுக்காக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எனில் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்.

இந்த திட்டத்தில் பகுதி ஊனமுற்றவர்கள் எனில் வழங்கப்படும் இறுதி தொகை ரூ. 1 லட்சம் மற்றும் மொத்த  ஊனமுற்றவர்கள் மற்றும் விபத்து காரணமாக இறந்தவர்கள் எனில் ரூ. 2 லட்சம். இந்த திட்டத்திற்கான பிரீமியம் வங்கி/அஞ்சலக கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதியுடன் உள்ளது. இத்திட்டத்தில் வருடத்திற்கு ரூ. 12 செலுத்தினால் போதுமானது. ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வசதியுமுள்ளது. இந்த  திட்டத்தில் சேர அருகிலுள்ள வங்கி கிளை / காப்பீட்டு அலுவலகம் / அஞ்சல் அலுவலகத்தை அணுகவும். மேலும் விபத்து / இறப்பு நேர்ந்த பிறகு 30 நாட்களுக்குள் உரிமை கோரல் செய்யப்பட  வேண்டும்.


முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme)

நாட்டிலுள்ள பெரும்பாலான மாநில அரசுகள் அம்மாநில மக்களுக்காக ஒவ்வொரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  தமிழக அரசு இந்த திட்டத்தை ஆண்டுக்கு ரூ. 75000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. மருத்துவ செலவுகளுக்கு  ரூ. 5 லட்சம் வரை இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி கோரலாம். பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் பங்கு பெற்றுள்ளன. இந்த திட்டமானது ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுத்துகிறது.

இத்திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் பெற வழிவகை செய்கிறது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் (New Health Insurance Scheme for employees of Government)

தமிழக அரசு இந்த திட்டத்தை அரசின் கீழ் இயங்கும் அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் மாதத்திற்கு ரூ. 150 பிரிமியம் திட்டத்தில் சேர்ந்ததிலிருந்து நான்கு வருடங்களுக்கு செலுத்தினால் போதுமானது. 

இத்திட்டத்தில் அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற தகுதியானவர். மருத்துவ செலவுகளுக்கு  ரூ. 4 லட்சம் வரை இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி நான்கு ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன் பெறலாம். இந்த தொகையானது டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும்.


அரசு ஊழியர்களுக்கான அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் (Postal Life Insurance Scheme for employees of Government)

இந்த திட்டம் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொது துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும் இந்த திட்டம் 1884 ஆம் வருடத்திலிருந்து செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பிரீமியம் செலுத்தி அதிக போனஸ் பெறலாம். இந்த திட்டத்திற்கான பிரீமியம் சம்பள கணக்கிலிருந்து நேரடியாக செலுத்தும் வசதியுடன் உள்ளது. அஞ்சலகத்தில் நேரிடியாக செலுத்தும் வசதியும் உண்டு. மேலும் இத்திட்டத்தில் கடன் பெரும் வசதியும், சரண்டர் செய்யும் வசதியும், வருமான வரி தள்ளுபடி வசதியும், வாரிசுதாரர் நியமன வசதியும் உண்டு. 

இத்திட்டத்தில் 19 முதல் 55 வயதுக்குட்பட்டவர் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பாலிசி எடுத்து கொள்ளலாம். எந்த அஞ்சலக அலுவலகத்தில் பாலிசி எடுத்திருந்தாலும் தாங்களோ வாரிசுதாராரோ எந்தவொரு தபால் அலுவலகத்திலும் கடன் தொகை, முதிர்வு தொகை, இறப்புக்கான பணம் முதலியவைகளை பெற்று கொள்ளலாம். குறைந்தது ரூ. 20,000/- அதிக பட்சம் ரூ. 50,00,000/- வரை எத்தனை பாலிசிகளாகவும் எடுக்கலாம். பணியிலிருந்து விடிவிக்கப்பட்டலாலும் பாலிசியை தொடரலாம். 


Comments

  1. Tamil free tools

    Use free tools from http://www.valaithamil.com/tools.html to create great content in Tamil.

    ReplyDelete

Post a Comment

Please provide feedback to improve this post. Thanks