Recent Posts

How to use cVIGIL App - சி-விஜில் செயலி பற்றி தெரிந்து கொள்வோம்

  சி-விஜில் செயலி மூலம் புகார் அளிப்பது எப்படி?


இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தி வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மாதிரி தேர்தல் விதிமுறைகளை(MCC) அமல்படுத்துகிறது. இந்த விதிமீறல்களை குடிமக்கள் இணையவழியில் புகாரளிக்க சி-விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி தேர்தல் காலங்களில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவெனில் புகார் அளித்து 100 நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகளால் அதற்கான தீர்வு காணப்பட்டு குடிமக்களுக்கு பதில் அளிக்கப்படும்.  


சி-விஜில் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

சி-விஜில் செயலியை ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பவர்கள்  கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் அல்லது ஆப்பிள் கைப்பேசி வைத்திருப்பவர்கள் ஆஃப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


குடிமக்கள் புகார் அளிக்கும் முறைகள் என்னென்ன?

குடிமக்கள் புகாரை இரண்டு முறைகளில் அளிக்கலாம். ஒன்று தங்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டு, கைப்பேசி மற்றும் OTP மூலம் உள்நுழைவு செய்து கொண்டு புகார் அளிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் குடிமக்கள் தாங்கள் அளிக்கும் புகார்களின் நிலைகளை அறியமுடியும். மேலும் புகாரின் நிலை குறித்து குறுச்செய்தி பெற முடியும்.  மற்றொரு முறையில் குடிமக்கள் தங்களின் விவரங்களை தெரியப்படுத்தாமல் ANONYMOUS முறையில் புகார் அளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் யார் புகார் அளித்தது என்பது தெரியாது.


புகாரை எவ்வாறு அளிக்க வேண்டும்?

குடிமக்கள் புகாரை ஏதேனும் ஒரு நேரடியாக எடுக்கப்பட்ட PHOTO, VIDEO, AUDIO வடிவ ஆவணத்தோடு சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே எடுத்து வைத்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய இயலாது. இந்த புகாரை 5 நிமிடத்தில் பதிவு செய்ய வேண்டும். புகார் அளிக்கும் போது புகார் உள்ள இடத்தின் தகவல் சேகரிக்கப்படும். ஆதலால் புகார் அளிக்கும்போது கைப்பேசியில் MOBILE DATA மற்றும் GPS LOCATION ஆன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.



எந்த மாதிரியான புகார் அளிக்கலாம்?

  • Money Distribution - பண விநியோகம்
  • Gifts/Coupons Distribution - பரிசு அல்லது கூப்பன்கள் விநியோகம்
  • Liquor Distribution - மதுபான விநியோகம்
  • Posters/Banners without permission - அனுமதியின்றி வைக்கப்பட்ட சுவரொட்டிகள் அல்லது பதாகைகள்
  • Display of Firearms, Intimidation - துப்பாக்கிகள் வைத்திருத்தல் அல்லது மிரட்டல்
  • Vehicles or Convoys without permission - அனுமதியின்றி வாகனங்கள் அல்லது வாகன அணிவகுப்பு
  • Paid News - கட்டண செய்திகள்
  • Property Defacement - சொத்துக்கள் சேதம்
  • Transportation of Voters on polling day - வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களுக்கான போக்குவரத்து
  • Campaigning within 200 meters of the polling booth - வாக்குசாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் பிரசாரம் செய்தல்
  • Campaigning during ban period - தடை காலத்தில் பிரசாரம் செய்தல்
  • Religious or Communal speeches/messages - மதம்/சாதி வாத உரைகள் அல்லது செய்திகள்
  • Use of speakers beyond permitted time - அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக ஒலிபெருக்கி பயன்பாடு
  • Posters without mandatory declaration - அறிவிப்பு இல்லமால் சுவரொட்டிகள்
  • Transportation of public for rallies - பேரணிகளுக்கு பொதுமக்களின் போக்குவரத்து
  • Others - மற்றவை


சி-விஜில் செயலியில் அளிக்கப்படும் புகார் எவ்வளவு நேரத்தில் பரிசீலிக்கப்படும்?

முதல் 5 நிமிடங்களில் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் மூலம் வரப்பெற்ற புகார் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஒதிக்கீடு செய்யப்படும். அடுத்த 15 நிமிடங்களில் பறக்கும் படை அந்த நிகழ்விடத்தை அடையும். அடுத்த 30 நிமிடங்களில் பறக்கும் படை புகார் மீது புலனாய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அளிக்கும். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர்(RO) மூலம் அடுத்த 50 நிமிடங்களில் புகார் மீது இறுதி தீர்வு எடுக்கப்படும்.

Comments