Recent Posts

How to link Aadhaar Number with PAN Card? || பான் கார்டுடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது?

 பான் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைப்பது எப்படி?


உங்கள் ஆதார் எண்ணை உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக மத்திய அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண்ணை உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்க தவறினால் ஏப்ரல் 1 தேதி முதல் பான் அட்டை செயல்படாது. மேலும் வருமான வரிச் சட்ட பிரிவு 272B -ன் படி ஆவணங்களை இணைக்கத் தவறும் நபர்களுக்கு மத்திய அரசால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு ஆவணங்களையும் இணைக்க மத்திய அரசு இணைப்பதற்கான காலக்கெடுவை பல முறை நீட்டித்து வந்தது. காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படாவிட்டால், அனைத்து ஆதார் அட்டைகளையும் இந்த மாத இறுதிக்குள் பான் அட்டை உடன் இணைக்க வேண்டும்.


இவ்வாறு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைப்பதன் மூலம் நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் வரி ஏய்ப்பை தவிர்க்க முடியும். ஒரே நிறுவனம் / தனி நபர் பல பான் அட்டைகளை விண்ணப்பித்தலை தடுக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் வருமான வரித்துறை பண பரிவர்த்தனைகளை துல்லியமாக கணக்கிட முடியும்.


ஆதார் எண்ணை உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்:


  1. வருமான வரித் துறையின் போர்ட்டலைப் பயன்படுத்தி இணைத்தல்
  2. எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தி இணைத்தல்
  3. நேரடியாக சேவை மையம் மூலம் இணைத்தல்


(I). வருமான வரித் துறையின் போர்ட்டலைப் பயன்படுத்துதல்

1. வருமான வரித் துறையின் போர்ட்டலுக்கு கீழ்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி செல்லவும்.

http://incometaxindiaefiling.gov.in/


2. இடது புறத்தில் உள்ள "Link Aadhaar" இணைப்பை க்ளிக் செய்யவும்.


3. நிரந்தர கணக்கு எண், ஆதார் எண், அதாரில் கொடுக்கப்பட்ட பெயர் போன்றவற்றை நிரப்பவும்.


4.பிறகு "Link Aadhaar" பட்டனை க்ளிக் செய்யவும்.


மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பின் தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.


(II). எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்துதல்

உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிலிருந்து கீழ்காணும் வடிவத்தில் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்ப வேண்டும்.

UIDPAN (Put Space) (12-Digit Aadhaar number) (Put Space) (10-Digit PAN Number)


(III). நேரடியாக விண்ணப்பம் மூலம் இணைத்தல்

அருகிலுள்ள சேவை மையத்தை அணுகி இணைப்பு-I படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அதனுடன் ஆதார் மற்றும் பான் அட்டை நகல்களை இணைக்க வேண்டும். நேரடியாக இணைப்பதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மற்ற முறைகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை. மக்கள் இலவசமாக இணைக்கலாம்.


ஆதார் எண்ணை உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைத்தற்கான விண்ணப்பத்தின் நிலை அறிதல்


1. வருமான வரித் துறையின் போர்ட்டலுக்கு கீழ்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி செல்லவும்.

http://incometaxindiaefiling.gov.in/


2. இடது புறத்தில் உள்ள "Link Aadhaar" இணைப்பை க்ளிக் செய்யவும்.


3. "Click Here to view the status if you have already submitted the Link Aadhaar Request" என்பதை க்ளிக் செய்யவும்.


4. நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் போன்றவற்றை நிரப்பவும்.


4.பிறகு "View Link Aadhaar Status" பட்டனை க்ளிக் செய்யவும்.


மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பின் தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான நிலை தெரிவிக்கப்படும்.


Comments