Recent Posts

Free House Scheme - Pradhan Mantri Awaas Yojana - இலவச வீடு திட்டம் - பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மத்திய அரசால் அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கூடிய கான்கிரீட் வீடு ஏற்படுத்தி தருவதே ஆகும். இந்த திட்டம் வீடு இல்லாத அல்லது குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வீட்டின் அளவு 25 சதுர அடியாக இருக்க வேண்டும்.


திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • இந்த திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
  • வங்கிகளில் 3% வரை வட்டி மானியம் கிடைக்கும்
  • இலவச கழிப்பறை ஏற்படுத்தி தரப்படும்
  • பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும்


 இலவச வீடு யாரெல்லாம் பெற முடியும்?

  • வேறு இடத்தில் எந்தவொரு பக்கா கான்கிரீட் வீட்டையும் சொந்தமாக்க வைத்திருக்கக்கூடாது.
  • அரசின் வேறு எந்தவொரு வீடு திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கக்கூடாது.
  • வீடு இல்லாத அல்லது குடிசையில் வாழும் ஏழை குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்
  • நிலமற்ற கூலி தொழிலாளர்கள், SC/ST பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை பெறலாம்


 இலவச வீடு யாரெல்லாம் பெற முடியாது?

வருமான வரி கட்டுபவர்கள் மற்றும் அரசு வேலைகளில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • சாதி சான்றிதழ்
  • வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம்
  • நிலத்தின் பட்டா


விண்ணப்பிப்பது எப்படி?

  • கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பித்தார் பெயர் நிரந்தர காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும். இந்த பட்டியல் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் இருக்கும்.
  • வங்கிகளில் வீட்டிற்கான கடன் பெரும்பொழுது அதற்கான மானியத்தை இத்திட்டத்தின் மூலம் கேட்டு பெறலாம்.

---

Comments