மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் அறிமுகம்
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது. அந்த நாளில் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது. இந்த ஆண்டு e-EPIC சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் நவம்பர் 2020 பிறகு புதியதாக சேர்ந்த அனைவருக்கும் இந்த சேவையை வழங்கிவருகிறது.
e-EPIC -ன் நன்மைகள்
இந்த வாக்காளர் அட்டையை எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொண்டு அச்சிட்டு கொள்ளலாம்.
இதில் உள்ள QR CODE -ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல், வரிசை எண், பாகம் மற்றும் தேர்தல் தொடர்பான தகல்வல்களை தெரிந்துகொள்ளலாம்.
எவ்வாறு e-EPIC பதிவிறக்கம் செய்வது?
வாக்காளர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருப்பின் http://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in என்ற இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு எண் உள்ளிட்டு OTP மூலம் e-EPIC அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
VoterHelpline என்ற கைப்பேசி செயலி வழியாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புதிய வாக்காளர்களை தவிர மற்ற வாக்காளர்கள் பிப்ரவரி 2021 பிறகு மேற்கண்ட சேவையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் இலவச அழைப்பு எண் 1950-ஐ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
---
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks