Chief Minister’s Solar Powered Green House Scheme - CMSPGHS - முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் - இலவச வீடு - விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் சூரிய ஆற்றல் கொண்ட பசுமை வீடு திட்டமானது 2011-12 ஆம் நிதியாண்டில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் கிராம புற ஏழை குடும்பங்களுக்கு சூரிய ஆற்றலுடன் கூடிய 300 சதுர அடி அளவில் வீடு தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் புதுப்பிக்க கூடிய ஆற்றலை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கின்றது. இது வேறெந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறந்த திட்டமாகும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- கிராமங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
- ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பு பரப்பளவில் 2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி தரப்படுகிறது.
- ஏற்கனவே உள்ள கூரை/ஓட்டு வீட்டிற்கு பதிலாகவும் கட்டித்தரப்படுகிறது.
- ஒவ்வொரு வீடும் சூரிய மின் விளக்குகள், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒரு வாழ்க்கை அறை(Living Room), படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
- பயனாளிக்கு சொந்தமான பட்டா உள்ள நிலத்தில் பசுமை வீடுகள் கட்டப்படும்.
பசுமை வீடு பெற தகுதிகள் யாவை?
- கிராம பஞ்சாயத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- 300 சதுர அடிக்கு குறையாத நிலத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
- குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரில் பட்டா வைத்திருக்க வேண்டும்.
- வேறு இடத்தில் எந்தவொரு பக்கா கான்கிரீட் வீட்டையும் சொந்தமாக்க வைத்திருக்கக்கூடாது.
- அரசின் வேறு எந்தவொரு வீடு திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கக்கூடாது.
பயனாளிகள் எவ்வாறு தேர்தெடுக்கப்படுகிறார்கள்?
- கிராம பஞ்சாயத்தில் வாழும் ஏழை மக்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- மொத்த ஒதுக்கீட்டில் 29% SC வகுப்பினருக்கும், 1% ST வகுப்பினருக்கும், மீதமுள்ள 70% மற்றவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
- மாவட்ட வாரியாக ஒதுக்கீட்டில் 3% மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படும்.
- பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் போது, பின்வரும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள்
- விதவைகள்
- ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள்
- பெண்கள் தலைமையிலான குடும்பங்கள்
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்
- கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்
- திருநங்கைகள்
- எச்.ஐ.வி / எய்ட்ஸ் / காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள்
- குடும்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்கள்
- தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
- BDO தலைமையிலான குழுவால் வறுமை கோட்டிற்கு கீழுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அத்தகைய பயனாளிகளின் பட்டியல் கிராமசபையால் அங்கீகரிக்கப்படும்.
பசுமை வீடு யாரால் கட்டித்தரப்படும்?
சிமெண்ட், ஸ்டீல் கம்பிகள், கதவு சன்னல்கள் ஊரக வளர்ச்சி துறை மூலம் கொண்டுவரப்பட்டு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். ஐந்து சூரிய மின் விளக்குகள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஏற்படுத்தி தரப்படும்.
நிபந்தனைகள்
- படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை போன்றவைகளை வேண்டிய திசையை மாற்றி வைத்துக்கொள்ளலாம். ஆனால் வீடு 300 சதுர அடி பரப்பளவில் மட்டுமே கட்டப்படும்.
- பீங்கான் டைல்ஸ்களில் அச்சிடப்பட்ட திட்டத்தின் சின்னம் அனைத்து வீடுகளிலும் பொருத்தப்படும்.
- திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் கட்டிய ஆண்டு ஆகியவை ஒவ்வொரு வீட்டிலும் வரையப்படும்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம்
- நிலத்தின் பட்டா
விண்ணப்பிப்பது எப்படி?
கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks