Pradhan Mantri Ujjwala Yojana - PMUY - பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டம் - இலவச GAS இணைப்பு - Free Gas Cylinder - விண்ணப்பிப்பது எப்படி?
பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
பிரதம மந்திரியின் உஜ்வலா யோஜனா திட்டமானது மத்திய அரசால் "தூய்மையான எரிபொருள், சிறந்த வாழ்க்கை" என்ற கொள்கையுடன் 01-05-2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் புகையில்லாத கிராமத்தை கொண்ட நாட்டை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் LPG பயன்பாட்டை அதிகரிப்பதோடு புகையினால் ஏற்படும் நோய்கள், காற்று மாசுபாடு, காடழிப்பு போன்றவை குறைகிறது.
திட்டத்தின் நோக்கம்?
- இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு சலுகையுடன் கூடிய LPG இணைப்புகளை ரூ.1600 அரசு நிதியுதவியுடன் (ஒரு இணைப்புக்கு) வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும், ஆரோக்கியமான சமையல் எரிபொருளை வழங்கவும், பாதுகாப்பற்ற இடங்களில் விறகு சேகரிக்கும் சிரமங்களை போக்கவும், விறகு, நிலக்கரி, சாணத்தால் செய்யப்பட்ட வறட்டி அல்லது எருமுட்டை போன்ற எரிபொருளைப் பயன்படுத்துவதால் லட்சக்கணக்கான கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழைந்தைகளிடையே ஏற்படும் சுகாதார தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட குடும்ப தலைவிகளின் பெயரில் விண்ணப்பிக்க வேண்டும்.
- இத்திட்டத்தில் அரசின் மானியங்களை பெற நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் விண்ணப்பதாரர் பெயரில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
- ஏற்கனவே LPG இணைப்புகளை பெற்றிருப்போர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கூடாது.
- வறுமை கோட்டிற்கு கீழுள்ள SC/ST குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் யாவை?
- குடும்ப அட்டை
- ஆதார் அட்டை
- வங்கி கணக்குப்புத்தகம்
- பஞ்சாயத்து அலுவலத்திலிருந்து பெறப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர் என்பதற்கான அடையாள சான்று (BPL Card)
எப்படி விண்ணப்பிப்பது?
அருகிலுள்ள LPG முகவர்களை (Gas Agency) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
BPL ID பெறுவது எப்படி?
- BPL குடும்பங்களை அடையாளம் காண்பது சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு தரவு மூலம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால், BPL எண்ணை பஞ்சாயத்து அலுவலத்திலிருந்து பெற முடியும்.
- புதியதாக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் தங்களுடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலத்தில் அதற்கான படிவத்துடன் விண்ணப்பித்து பெற வேண்டும்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks