Recent Posts

Pradhan Mantri Mudra Yojana (PMMY) - Mudra Loan Scheme - முத்ரா தொழில் கடன் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

முத்ரா தொழில் கடன் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



முத்ரா தொழில் கடன் திட்டம் பாரத பிரதமரால் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் கார்ப்பரேட் அல்லதா சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடன்கள் Commercial Banks, RRBs, Small Finance Banks, MFIs and NBFCs போன்ற நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. கடன் வாங்குவோர் மேற்கண்ட நிறுவனங்கள் அல்லது www.udyamimitra.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும். MUDRA விரிவாக்கம் Micro Units Development and Refinance Agency.

மூன்று வகையான கடன் திட்டம்

இத்திட்டம் பயனாளியின் வளர்ச்சி மற்றும் தேவையை கணக்கில் கொண்டு மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. பயனாளியின் வகையை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.

    • சிசு (SHISHU) - இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
    • கிஷோர் (KISHORE) - இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
    • தருண் (TARUN) - இத்திட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

முத்ரா கடன் அட்டை

  • இத்திட்டத்தில் முத்ரா அட்டை (கிரிடிட் கார்டு) வழங்கப்படும். அதை வைத்து கூடுதலாக பத்தாயிரம் வரை பணம் எடுக்க முடியும்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை, கீழ்காணும் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலமாக மட்டுமே பெற முடியும்.

  • பொதுத்துறை வங்கிகள்
  • தனியார் துறை வங்கிகள்
  • அரசு கூட்டுறவு வங்கிகள்
  • மண்டலங்களை சேர்ந்த கிராமப்புற வங்கிகள்
  • மைக்ரோ நிதி வழங்கும் நிறுவனங்கள்
  • வங்கிகளைத் தவிர வேறு நிதி நிறுவனங்கள்


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • கடன் வாங்குவோர் மேற்கண்ட நிறுவனங்கள் அல்லது www.udyamimitra.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு சேவை கட்டணம் கிடையாது.
  • கடனுக்கு இணையான சொத்து பிணையம் தேவையில்லை (Collateral Free).
  • கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் எந்தவொரு வங்கி / நிதி நிறுவனத்திலும் கடன் பெற்று, அதை கட்ட தவறியவராக இருக்கக்கூடாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • சிறு குறு உற்பத்தி நிறுவனங்கள்
  • கடைக்காரர்கள்
  • பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்
  • கைவினைஞர்கள்

  • அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே செயல்படும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
  • கல்வி கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன் இத்திட்டத்தில் வராது.

தேவைப்படும் ஆவணங்கள்

    1. பயனாளியின் புகைப்படம்
    2. அடையாள சான்று (Voter’s ID card / Driving License / PAN Card / Aadhaar Card / Passport)
    3. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் விலைப்பட்டியல்
    4. இருப்பிட சான்றிதழ்
    5. சாதிச்சான்றிதழ்
---

Comments