Recent Posts

Indian Bank Rural Self Employment Training - INDSETI - Free - இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி பற்றி அறிந்துகொள்வோம்

இந்தியன் வங்கியின் இலவச ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிப்பது எப்படி?


இந்தியன் வங்கி ஏழ்மையான கிராமப்புற மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்க்காக தங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியின் (Corporate Social Responsibility (CSR)) மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை (RSETI(RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE)) நடத்தி வருகிறது. இந்நிறுவனம் கிராமப்புற மக்களுக்கு 60 மேற்பட்ட சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறது. மேலும் பயிற்சிக்கு பின் இரண்டு வருடங்களுக்கு பயனாளிகளை கண்காணித்தும் அவர்களுக்கு தேவையான கடன் உதவிகளை செய்தும் வருகிறது. 


பயிற்சியில் கலந்துக்கொள்ள தேவையான தகுதிகள்

  • விண்ணப்பதாரின் வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
  • தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்


தேவையான ஆவணங்கள்

  1. குடும்ப அட்டை நகல் 
  2. ஆதார் அட்டை நகல்
  3. புகைப்படம்
  4. மாற்று சான்றிதழ்(TC)
  5. வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்பதற்கான எண் (BPL ID)

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

  • வகுப்பு நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
  • பயிற்சி களங்களில் பயிற்சியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், காலை மாலை தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.


எவ்வளவு நாள் பயிற்சி வழங்கப்படும்?

பயிற்சிகளானது பயிற்சியை பொறுத்து குறைந்தது ஒரு வாரம் முதல் ஆறு வாரம் வரை வழங்கப்படும். பெரும்பாலான பயிற்சிகள் 10 நாட்கள் வழங்கப்படும்.


என்னென்ன பயிற்சிகள் வழங்கபடுகிறது?

வேளாண்மை சார்ந்தவை

  • காளான் வளர்ப்பு
  • ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு 
  • கறவை மாடு வளர்ப்பு
  • மண்புழு உரம் தயாரிப்பு
  • மீன் வளர்ப்பு
  • பன்றி வளர்ப்பு
  • தேனீ வளர்ப்பு
  • நாட்டுக்கோழி வளர்ப்பு
  • பூ மற்றும் தோட்டக்கலை பயிற்சி
  • பசுமை தோட்டம் அமைத்தல்
  • காய்கறி நாற்றங்கால் பராமரித்தல் மற்றும் சாகுபடி செய்தல்


தயாரிப்பு

  • செயற்கை நகை தயாரித்தல்
  • அகர்பத்தி தயாரித்தல்
  • தையல் பயிற்சி
  • பூ வேலைப்பாடு
  • மெழுகுவர்த்தி தயாரித்தல்
  • அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்தல்
  • துரித உணவு தயாரித்தல்


சேவை

  • அழகு கலை பயிற்சி
  • செல்போன் பழுது நீக்கம்
  • மடிக்கணினி பழுது நீக்கம்
  • கணிப்பொறி கணக்குப்பதிவு
  • கணிப்பொறி பழுது நீக்கம் மற்றும் வலை பிணைப்பு
  • வீட்டு மின்சாதனம் பழுது நீக்கம்
  • இருசக்கர வாகன பழுது நீக்கம்
  • இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி
  • மர தச்சு வேலை பயிற்சி
  • பிளம்பர் பயிற்சி
  • போட்டோ மற்றும் வீடியோ பயிற்சி
  • இன்வெர்டர் மற்றும் UPS தயாரித்தல் பயிற்சி
  • வெல்டிங் பயிற்சி


பயிற்சில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

கீழுள்ள இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 


மாவட்ட வாரியாக முகவரிகள்

Cuddalore District

Logambal Kovil Street,

Seetharam Nagar,

Cuddalore - 607001.


Dharmapuri District

Khadi Building,

Collectorate Complex,

Dharmapuri - 635705.


Kancheepuram District

Plot No.18,Door No. 685,

First Cross St., Arasu Nagar,

Vishnu Kanchi,

Kancheepuram - 631501.


Krishnagiri District

TRYSEM Building, Krishnagiri Dam (KRPDam),

Krishnagiri - 635101.


Namakkal District

II Floor, Ravin Plaza, 3/151,

Trichy Main Road,

Near Railway over bridge,

Namakkal - 637001.


Puducherry

159, Thiruvalluar Salai,

Pillai Thottam,

Puducherry - 605013.


Salem District

I Floor R. R. Thirumana Mahal,

Kondalampatti Bye Pass Road,

Near Soudeswari College,

Salem - 636010.


Tiruvallur District

12/13 Ekkadu Road,

Ekkadu, Tiruvallur,

Tiruvallur Dist. - 602001.


Thiruvannamalai District

No.143/74, Ramalinganar Main Road,

Thiruvannamalai - 606 601.


Vellore District

No. 25, 2nd Floor,

1st East Main Road,

Gandhi Nagar,

Vellore - 632006.


Villupuram District

5, Alamelupuram (First Floor),

Villupuram - 605602.

---

Comments