Recent Posts

Free Data Card to College Students - கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு திட்டம்

 கல்லூரி மாணவர்களுக்கு இலவச இணையவசதி திட்டம்


தமிழ் நாட்டில் கொரோனா நோய் பரவல் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி பயில கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் பல கல்லூரிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள எதுவாக தமிழக அரசால் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கும் திட்டம் 10-01-2021 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவ மாணவிகளுக்கு ஜனவரி-2021 முதல் ஏப்ரல்-2021 வரை நான்கு மாதங்களுக்கு தினமும் 2 GB DATA PER DAY PACK உடன் கூடிய விலையில்லா டேட்டா கார்டு (Free Data Card) தமிழக அரசின் தகவல் தொழிநுட்பத்தின் கீழ் இயங்கும் எல்காட்(ELCOT) நிறுவனம் மூலம் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் 4 மாதங்களுக்கு அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்கள் படிப்புகளை தொடர முடியும்.

Comments