Recent Posts

Aadhaar Centre - Permanent Enrollment Centre - ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?

 ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?


பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொழி போன்ற விவரங்களை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு செல்வது கட்டாயமில்லை. ஆதார் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து இந்த விவரங்களை மாற்ற இயலும். இருப்பினும் பயோமெட்ரிக் தரவு மாற்றம்(Photo + Fingerprints + Iris), கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்க இயலும். அத்தகைய ஆதார் சேவை மையத்தை தொடங்குவது குறித்து பார்ப்போம்.


தனி நபர்கள் ஆதார் சேவை மையத்தை தொடங்க முடியுமா?

ஆதார் சேவை மையத்தை தனி நபர்கள் அல்லது தனியார் இ-சேவை மையங்கள் தொடங்க இயலாது. தொடக்கத்தில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் நடத்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பொது சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு புகார்கள் காரணமாக தற்போது அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேவைகளை பொருத்து அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது குறிப்பிட்ட சில வங்கிகள், அரசு துறை அலுவலகங்கள், அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமே ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. 


ஆதார் சேவை மையங்கள் தற்போது எங்கெல்லாம் செயல்படுகின்றன?

  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (Collector Office)
  • வட்டாட்சியர் அலுவலகம் (Taluk Office)
  • நகராட்சி அலுவலகம் (Municipality Office)
  • தலைமை அஞ்சல் அலுவலகம் (Head Post Office)
  • பொது துறை வங்கிகள் (State Bank of India, Indian Bank)
  • தனியார் வங்கிகள் (Canara Bank, South Indian Bank, ICICI Bank, Corporation Bank, Tamil Nadu Mercantile Bank, City Union Bank)


ஆதார் சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள்

  • புதிய ஆதார் பதிவு
  • ஆதார் நிலை சரிபார்த்தல்
  • ஆதார் பதிவிறக்கம் செய்தல்
  • ஆதார் விவரங்களை புதுப்பித்தல் (Name, Address, Mobile No., Email ID, Date of Birth, Gender, Biometric (Photo + Fingerprints + Iris))
  • புதுப்பித்த விண்ணப்ப நிலையை சரிபார்த்தல்
  • மேலும் இதர ஆதார் தொடர்பான சேவைகள்


ஆதார் இணையதளத்தில் வழங்கப்படும் சேவைகள்

  • ஆதார் இணையதளம் https://uidai.gov.in/
  • ஆதார் எண் சரிபார்த்தல்
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்தல்
  • தொலைக்கப்பட்ட ஆதார் எண் (UID) அல்லது சேர்க்கை எண்ணை (EID) கண்டறிதல்
  • மெய்நிகர் ID (Virtual ID) உருவாக்குதல்
  • காகிதமற்ற ஆதார் விவரங்கள் அடங்கிய கோப்பை (PAPERLESS OFFLINE eKYC XML) பதிவிறக்கம் செய்தல்
  • ஆதார் – வங்கி கணக்கு இணைத்தல் நிலையை சரிபார்த்தல்
  • பயோமெட்ரிக் விவரங்களை LOCK/UNLOCK செய்தல்
  • ஆதார் அங்கீகார வரலாறு (AUTHENTICATION HISTORY)
  • ஆதார் LOCK/UNLOCK செய்தல்
  • ஆதார் நிலை சரிபார்த்தல்
  • ஆதார் பதிவிறக்கம்
  • ஆதார் விவரங்களை புதுப்பித்தல் (Name, Date of Birth, Gender, Address and Language)
  • புதுப்பித்த விண்ணப்ப நிலையை சரிபார்த்தல்
  • ஆதார் கார்டு கோருதல்
  • மேலும் இதர ஆதார் தொடர்பான சேவைகள்


எத்தனை முறை ஆதார் விவரங்களை மாற்ற முடியும்?

  • பெயர் : இரண்டு முறை மட்டுமே 
  • பிறந்த தேதி : ஒருமுறை மட்டுமே (சரிபார்க்கப்ட்டது எனில்)
  • பாலினம் : ஒருமுறை மட்டுமே
  • மற்ற விவரங்கள்(முகவரி, பயோமெட்ரிக் தரவு, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி) : எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்

ஆதார் விவரங்களை மாற்ற தேவையான ஆவணங்கள்?

  • பெயர் : புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று
  • பிறந்த தேதி : பிறந்த தேதியை குறிப்பிடும் சான்று
  • முகவரி : முகவரி சான்று

  • மற்ற விவரங்கள்(பாலினம், பயோமெட்ரிக் தரவு, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி) : ஆவணங்கள் தேவையில்லை
  • ஆதார் சேர்க்கை படிவம் தரவிறக்கவும் மற்றும் List of  Poof of Identity (POI), Poof of Date of Birth, Poof of Address (POA) அறியவும் ஆதார் இணையதளத்தை பார்வையிடவும்.


- - -

Comments