UYEGP LOAN SCHEME - படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் - தொழில் கடன் பெறுவது எப்படி?
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் - தொழில் கடன் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டை சார்ந்த படித்த வேலையற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UNEMPLOYED YOUTH EMPLOYMENT GENERATION PROGRAMME (UYEGP) திட்டத்தின் மூலம் 8 ஆம் வகுப்பு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுயமாக விற்பனை மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கி மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.
பயன்கள்
- பொருளாதார ரீதியில் சாத்தியமாக உள்ள உற்பத்தி, சேவை மற்றும் விற்பனை சார்ந்த தொழில்கள் அனைத்திற்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். வேளாண்சார்ந்த தொழில்கள், எடுத்துக்காட்டாக பயிர் வளர்ப்பு, ஆடு , மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவைகளுக்கு இத்திட்டத்தில் கடன் பெற இயலாது.
- திட்ட மதிப்பீட்டில் அரசு மானிய தொகை 25 சதவீதம் உட்பட 90 முதல் 95 சதவீதம் வரை வங்கிகளில் கடன் கோரலாம்.
- திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ,1,25,000 வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
தகுதிகள்
- 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/ -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- கல்வித்தகுதிக்கான சான்றிதழ்
- விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை
- குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்
- சாதிச்சான்றிதழ்
- முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் அதற்குரிய ஆவணங்கள்
- மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் முறை
- பயனாளிகள் https://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதளத்தில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களோடு அதன் நகல்களை மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையத்திலும் சென்னையில் மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
- பொது பிரிவினராயிருப்பின், திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
- சிறப்பு பிரிவினராயிருப்பின், (பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சிறுபான்மையினர்/ பெண்கள்/ முன்னாள் இராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள்/ திருநங்கையர்) 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
- இத்திட்டத்தில் கடன் பெற திட்ட அறிக்கை தயார் செய்திட மாதிரி திட்ட அறிக்கை மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யும் படிவம் ஆகியவை UYEGP திட்ட இணைய தளத்தில் உள்ளது.
- இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான UYEGP திட்ட நேர்காணல் குழு மூலம் தெர்வு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks