Unemployment Assistance Scheme for Unemployed Youth - தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் SSLC Pass or Fail / HSC / Diploma / Degree போன்ற கல்வி படிப்புகளை படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்புமின்றி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பயன்கள்
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனில் மாதத்திற்கு ரூ.200/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனில் மாதத்திற்கு ரூ.300/-ம் வழங்கப்படும். மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர் எனில் மாதத்திற்கு ரூ.400/- வழங்கப்படும். பட்டதாரிகள் எனில் மாதத்திற்கு ரூ.600/- வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் எனில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் மாதத்திற்கு ரூ.600/-ம், மேல்நிலைக்கல்வி படித்திருந்தால் மாதத்திற்கு ரூ.700/-ம், பட்டபடிப்பு படித்திருந்தால் மாதத்திற்கு ரூ.1000/-ம் உதவித்தொகையாக வழங்கப்படும்.
- இந்த உதவித்தொகையானது அந்தந்த காலாண்டின் முடிவில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை (மாற்றுத்திறனாளிகள் எனில் பத்து ஆண்டுகள் வரை) அல்லது பயனாளிக்கு வேலை கிடைக்கும் வரை பயனாளியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
தகுதிகள்
- விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று தொடர்ந்து புதிப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எனில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர்/பழங்குடியினர் எனில் 45 வயதுக்கு மிகாமலும் இதர வகுப்பினர் எனில் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும் சுய வேலைவாய்ப்பில் ஈடுபாடாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பள்ளி/கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது.
தேவைப்படும் ஆவணங்கள்
- வேலைவாய்ப்பு பதிவு எண்
- ஆதார் அட்டை
- வங்கி கணக்குப் புத்தகம் முதல் பக்கம்
- வருமான சான்று
விண்ணப்பிக்கும் முறை
- வேலைவாய்ப்பு பதிவு எண்
- ஆதார் அட்டை
- வங்கி கணக்குப் புத்தகம் முதல் பக்கம்
- வருமான சான்று
- இதனை பெறுவதற்கு https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி உரிய சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks