Recent Posts

SINGLE WINDOW PORTAL for MSME - தொழில் முனைவோர்களுக்கான ஒற்றை சாளர இணையதளம் பற்றி அறிந்துகொள்வோம்

தொழில் முனைவோர்களுக்கான ஒற்றை சாளர இணையதளம்



தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு, அனுமதியை விரைவில் பெற்றுத்தர ஏதுவாக "ஒற்றை சாளர தகவு" (SINGLE WINDOW PORTAL) உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொழில் முனைவோர்கள் https://easybusiness.tn.gov.in/msme/ இணையதளத்தில் இணையவழியில் தங்களுக்கு தேவையான உரிமங்களை விண்ணப்பித்து பயனடைய முடியும்.


சிறப்பம்சங்கள்

  • ஒரே இடத்தில் விண்ணப்பித்தல் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை.
  • இணையதளம் வாயிலாகவே அனுமதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையதளம் வாயிலாகவே விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாக கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வசதியும் இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த இணையதளத்தில் MSME தொடர்புடைய அனைத்து இணையதளங்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதலில் விண்ணப்பதாரர் https://easybusiness.tn.gov.in/msme/ இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அனுமதிக்காக விண்ணப்பத்த பிறகு மேற்கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு இந்த இணையதளத்தின் வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும்.
  • ஒப்புதல் அளிக்கப்பட பிறகு அதற்கான சான்றிதழை இந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments

Post a Comment

Please provide feedback to improve this post. Thanks