Recent Posts

MSME(UDYAM) REGISTRATION ONLINE - Micro, Small or Medium Enterprise Registration - சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு UDYAM பதிவு சான்றிதழ் வாங்குவது எப்படி?

 சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு UDYAM பதிவு சான்றிதழ் வாங்குவது எப்படி? 


மத்திய அரசின் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் ஒரு நிறுவனம் UDYAM பதிவின் கீழ் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளலாம். சிறு குறு நிறுவனங்களுக்கான EM PART II & UAM சான்றிற்கு பதிலாக, UDYAM பதிவு சான்றிதழ் (UDYAM REGISTRATION CERTIFICATE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சான்றிதழ்கள் வரும் 31-03-2021 வரை மட்டும் செல்லுபடியாவதால், அனைத்து சிறு குறு நிறுவனங்களும் http://www.udyamregistration.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மைக்ரோ, சிறிய அல்லது நடுத்தர நிறுவனத்தின் வகைப்பாடு

(i) ஒரு மைக்ரோ எண்டர்பிரைஸ் என்பது ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் மீது முதலீடானது ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமலும் மற்றும் வருமானம் ஐந்து கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


(ii) ஒரு சிறிய எண்டர்பிரைஸ் என்பது ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் மீது முதலீடானது பத்து கோடி ரூபாய்க்கு மிகாமலும் மற்றும் வருமானம் ஆனது ஐம்பது கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


(iii) ஒரு நடுத்தர எண்டர்பிரைஸ் என்பது ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் மீது முதலீடானது ஐம்பது கோடி ரூபாய்க்கு மிகாமலும் மற்றும் வருமானம் ஆனது இருநூற்று ஐம்பது கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


பயன்கள்

  • UDYAM பதிவு சான்றிதழ் மூலம் அரசின் மின்-சந்தை மற்றும் மின்-ஒப்பந்தம் போன்ற செயல்பாடுகளில் பங்கேற்கலாம். 
  • சிறு குறு தொழில் செய்ய வங்கி கடன் பெறுவதற்கும் அரசின் மானியங்களை பெறுவதற்கும் இந்த சான்றிதழ் உபயோகப்படும்.


தகுதிகள்

மைக்ரோ, சிறிய அல்லது நடுத்தர தொழில்களை செய்பவர்களாக அல்லது நிறுவனங்களாக இருக்க வேண்டும்.


தேவைப்படும் முக்கிய விவரங்கள்

    1. ஆதார் எண்
    2. பான் எண்
    3. GSTIN எண்
    4. வகுப்பு சான்றிதழ் விவரங்கள்
    5. வங்கி கணக்கு விவரங்கள்
    6. நிறுவனத்தின் விவரங்கள்


விண்ணப்பிக்கும் முறை

  • மைக்ரோ, சிறிய அல்லது நடுத்தர நிறுவனத்தை நிறுவ விரும்பும் எந்தவொரு நபரும் ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி சுய அறிவிப்பின் அடிப்படையில் UDYAM பதிவு இணையதளத்தில் UDYAM பதிவை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • பதிவு செய்வதற்கான படிவம் UDYAM பதிவு போர்ட்டலில் வழங்கப்பட்டுள்ளது.

  • UDYAM பதிவு செய்ய கட்டணம் ஏதும் இல்லை.
  • UDYAM பதிவு செய்ய  உரிமையாளர் அல்லது நிர்வாக பங்குதாரரின் ஆதார் எண் தேவைப்படும்.
  • ஒரு நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கம் அல்லது ஒரு சங்கம் அல்லது அறக்கட்டளை எனில், அங்கீகரிக்கப்பட்டரின் ஆதார் எண்ணுடன் அதன் GSTIN and PAN ஆகியவற்றை வழங்க வேண்டும்.
  • எந்தவொரு நிறுவனமும் ஒன்றுக்கு மேற்பட்ட UDYAM பதிவுகளை செய்யக்கூடாது. உற்பத்தி அல்லது சேவை அல்லது இரண்டும் ஒரு UDYAM பதிவில் குறிப்பிடலாம்.
  • UDYAM பதிவு அல்லது புதுப்பித்தல் செயல்பாட்டில் சுயமாக அறிவிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்க முயற்சிப்பவர் சட்ட பிரிவு 27-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்திற்கு பொறுப்பாவார்.

  • பதிவு செய்த பின், நிறுவனத்திற்கு நிரந்தர அடையாள எண் (UDYAM பதிவு எண் eg. UDYAM-XX-00-0000000) வழங்கப்படும்.
  • பதிவு செயல்முறை முடிந்ததும் “UDYAM பதிவு சான்றிதழ்” ஆனது மின்-சான்றிதழாக வழங்கப்படும்.

Comments

  1. I have read your blog, your blog provides very informative and useful. Your blog provides important information about udyam registration and its activities. I also have similar content which is useful.

    msme-udyam-registration online

    ReplyDelete

Post a Comment

Please provide feedback to improve this post. Thanks