Recent Posts

Tamil Nadu Unorganised Workers Welfare Scheme - தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து அமைப்புசாரா தொழிலார்களும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற https://tnuwwb.tn.gov.in/ இணைய தளத்தில் பதிவு செய்து கொள்வது அவசியம்.

பயன்கள்

  • 60 வயது நிறைவுபெற்ற பதிவு செய்த தொழிலார்கள் ஓய்வூதியம் பெறலாம்.
  • ஓய்வுதியம் பெறும் தொழிலாளி இறந்து விட்டால் அவரது கணவர் / மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
  • மேலும் திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு உதவித்தொகை விண்ணப்பித்து பெறலாம்.



தகுதிகள்

  • அரசு ஊழியர்களாக இருக்க கூடாது.
  • விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பதிவு செய்த தொழிலார்களாக இருக்க வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. குடும்ப அட்டை
    2. ஆதார் அட்டை
    3. வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
    4. பணிச்சான்றிதழ் (பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில்)
    5. சரிபார்ப்பு சான்றிதழ் (பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில்)
    6. அடையாளச் சான்றிதழ் (ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, etc..)
    7. வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம்


விண்ணப்பிக்கும் முறை

  • முதலில் https://tnuwwb.tn.gov.in/ இணைய தளத்தில் தங்கள் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி OTP மூலம் உள்நுழையவும்.
  • பின்பு தனிப்பட்ட விவரங்கள், முகவரி, வேலை விவரங்கள், வங்கி விவரங்கள் போன்ற விவரங்களை பதிவிடவும்.
  • விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும்.
  • தங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும்.
  • நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல், தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
  • அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • தேவைப்படும்பொழுது இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் விவரங்களைப் பார்வையிடலாம், விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

Comments