Chief Minister Comprehensive Health Insurance Scheme - Tamil Nadu - CMCHIS Card - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5,00,000/- வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் பெற வழிவகை செய்கிறது.
இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்கள்
- அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் http://www.cmchistn.com/ வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது.
- இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் மற்றும் தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்
- இந்த திட்டமானது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/- க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும்.
- இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
- தகுதியுடைய நபரின் குழந்தைகள்
- தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்
- மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை
- இத்திட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
- குடும்ப அட்டை
- குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
- கிராம நிர்வாக அலுவலரிடம் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் வருமான சான்றொப்பம்
- குடும்ப அட்டை
- குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
- கிராம நிர்வாக அலுவலரிடம் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் வருமான சான்றொப்பம்
விண்ணப்பிக்கும் முறை
- கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்ப படிவத்தில் வருமான சான்று பெற வேண்டும்.
- அதன்பின் குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் மையத்திற்கு குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks