Recent Posts

Widow Pension - DESTITUTE WIDOW PENSION SCHEME - DWPS - ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


ஆதரவற்ற 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

தகுதிகள்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.   
  • விதவையாக இருத்தல் வேண்டும்.
  • அசையா சொத்து மதிப்பு ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
    3. ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
    4. விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
    5. கணவர் இறப்பு சான்றிதழ்
    6. விதவை சான்றிதழ்
    7. வங்கி கணக்கு புத்தகம்


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்

சேவை கட்டணம் - ரூ.  10 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

விண்ணப்பதாரருடைய நிரந்தர முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டம்(Taluk)

பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
தனி வட்டாச்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
(Special Tahsildar - Social Security Scheme)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்) 

Comments