Recent Posts

Pensioners Portal - ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம் பற்றி அறிந்துகொள்வோம்

 ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம்


ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்கள் https://tnpensioner.tn.gov.in/pensionportal இணையதளத்தில் முதன்முதலில் தங்களின் பென்ஷன் எண்(PPO NUMBER), பான் எண்(PAN NUMBER), பிறந்த தேதி, கைப்பேசி எண், கடவு சொல் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து கீழ்கண்ட விவரங்களை இணையவழியில்  பெறமுடியும்.

  • ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல்
  • 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய உரிமை விவரங்கள் 
  • வருமான வரி தாக்கல் செய்ய வருடாந்திர ஓய்வூதியம் பெறப்பட்ட விவரங்கள்
  • ஓய்வூதியதாரர்களின் நியமன(Nomination) விவரங்கள்
  • திருவிழா முன்பணம் பிடித்தம்
  • புதிய சுகாதார காப்பீட்டு திட்டம்
  • குடும்ப பாதுகாப்பு நிதி


மேலும் இந்த இணையதளத்தில் ஓய்வூதியம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள், அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்யலாம்.

Comments

Post a Comment

Please provide feedback to improve this post. Thanks