Recent Posts

Patta Chitta Adangal Difference - பட்டா, சிட்டா, அடங்கல் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு

பட்டா, சிட்டா, அடங்கல் இவைகளுக்கிடையே  உள்ள வேறுபாடு

பட்டா / சிட்டா

பட்டா என்பது ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். உதாரணம் தமிழக அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருவதை காணலாம். இதற்கு முன்பு பட்டாவானது  புத்தக வடிவில் கையொப்பம் இட்டு வழங்கப்பட்டது.

சிட்டா என்பது குறிப்பிட்ட நிலத்தின் புல எண், உட்பிரிவு எண், பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

தற்போது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இணையதளத்தில் பட்டா, சிட்டா இரண்டுமே ஒரே சான்றாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



அடங்கல்

அடங்கல் என்பது பயிரின் வகை, நீர்ப்பாசன ஆதாரம், உரிமையாளர் பெயர், சாகுபடி முறை, நிலத்தின் பரப்பு, நிலத்தின் பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். அரசு வறட்சி நிவாரணம் பெற, வங்கிகளில் கடன் பெற இந்த ஆவணம் தேவைப்படும்.



Comments