Recent Posts

Disability Pension - DIFFERENTLY ABLED PENSION SCHEME - DAPS - ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். கீழ்கண்ட வகையை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • பல்வகை குறைபாடு / Multiple Disabilities
  • கை கால் இயக்க குறைபாடு / Locomotor disability
  • அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் / Acid Attack Victims
  • மூளை முடக்கு வாத பாதிப்பு / Cerebral Palsy
  • தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் / Leprosy cured persons
  • தசை சிதைவு நோய் / Muscular Dystrophy
  • குள்ளத்தன்மை / Dwarfism
  • கண் பார்வையின்மை / Blindness
  • குறை பார்வையின்மை / Low-vision
  • காது கேளாமை / Deaf (Hearing impairment)
  • பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு / Speech and Language Disability
  • அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்) / Intellectual disability
  • புற உலக சிந்தனையற்றவர் / Autism spectrum disorder
  • குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு / Specific Learning Disabilities
  • மனநோய் / Mental illness
  • நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு / Chronic neurological conditions
  • திசு பண்முகக் கடினமாதல் / Multiple Sclerosis
  • நடுக்கு வாதம் / Parkinson's disease
  • இரத்த அழிவு சோகை / Thalassemia 
  • இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு / Haemophilia 
  • அரிவாளனு இரத்த சோகை / Sickle cell disease
  • செவித்திறன் குறைபாடு / Hard of hearing (Hearing impairment)


தகுதிகள்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • ஊனம் நிலை 40% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
  • அரசு வேலைகளில் இருக்க கூடாது.
  • தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அல்லது சுயத்தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருடத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
    3. ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
    4. விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
    5. தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை
    6. வங்கி கணக்கு புத்தகம்


விண்ணப்பிக்கும் முறை

  • அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்

சேவை கட்டணம் - ரூ.  10 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

விண்ணப்பதாரருடைய நிரந்தர முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டம்(Taluk)

பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
தனி வட்டாச்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
(Special Tahsildar - Social Security Scheme)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments