Deserted Woman Pension - DESTITUTE DESERTED WIVES PENSION SCHEME - DDWPS - ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
ஆதரவற்ற 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
தகுதிகள்
- ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
- 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
- சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- அசையா சொத்து மதிப்பு ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
- ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
- விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
- வங்கி கணக்கு புத்தகம்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
- ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
- விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
- வங்கி கணக்கு புத்தகம்
விண்ணப்பிக்கும் முறை
அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks