Right To Education - 2009 - Application to Private Schools - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009 - விண்ணப்பிப்பது எப்படி?
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 - பிரிவு 12.1 (C) விதிகளின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு விண்ணப்பித்தல் எப்படி?
குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் - 2009 இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும். 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே உள்ள பள்ளிகளில் இலவச தொடக்க கல்வி பெற இந்த சட்டம் வழிவகுக்கிறது. இந்த சட்டத்தின் படி ஒவ்வொரு தனியார் பள்ளியும் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கு 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களின் கல்விக்கான செலவை அரசே பள்ளிகளுக்கு செலுத்திவிடும்.
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பதாரரின் புகைப்படம் (150 px X 175 px)
- பிறப்பு சான்றிதழ்
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை/ குடும்ப அட்டை
- நலிவடைந்த பிரிவினருக்கு வருமான சான்றிதழ் (for Weaker Section Candidates)
- வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் (for Disadvantage Group Candidates)
- வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு சிறப்பு பிரிவு சான்றிதழ் (Disadvantaged Group Special Category Certificate)
குறிப்பு
- இந்த சட்டப்படி நலிவடைந்தோர் என்போர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்.
- இந்த சட்டப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் என்போர்
- SC/ST/OBC பிரிவினர்
- ஆதரவற்றவர்கள் (Orphan)
- மூன்றாம் பாலினத்தவர் (Transgender)
- எச்ஐவி பாதித்தவர் குழந்தைகள்
- Scavenger குழந்தைகள்
- மாற்றுத்திறனாளி குழந்தைகள்
- இணையதளத்தில் விண்ணப்பிக்க மற்றும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை அறிய https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks