Recent Posts

ONLINE TEMPORARY CRACKERS LICENSE - தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவது எப்படி?

 தற்காலிக பட்டாசு  கடை உரிமம் பெறுவது எப்படி?


ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி காலங்களில் தற்காலிக பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். 2019 முதல் இணைதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டு உரிமம் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டட கடைசி தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அனுப்பவேண்டும்.

2008-ம் வருட வெடிபொருள் விதிகளின் படி, பட்டாசு கடை வைக்கும் கட்டடம், கல் மற்றும் தார்சு கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைத்தல் வேண்டும். மின்சார விளக்குகள் மட்டும் கடையில் அமைக்க வேண்டும். மேலும் தீயணைப்பு துறை, சுகாதார துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையின்மை சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கும்போது, கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. முகவரி சான்று
    3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (PAN அட்டை/ ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பாஸ்போர்ட் etc.)
    4. உரிம கட்டணம் அசல் சலான்
    5. பட்டா அல்லது சொத்து பத்திரம் ( Patta or Title Deed etc.)
    6. வாடகை கட்டிடமாக இருந்தால் நோட்டரி வழக்கறினரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் 
    7. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட வரி செலுத்திய ரசீது
    8. விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம்
    9. கட்டட வரைபட நகல் (A4 Size) அல்லது கட்டிடத் திட்ட ஒப்புதல்
    10. விண்ணப்ப படிவ விவரங்கள்
    11. மற்ற ஆவணங்கள் (ஏதேனும் இருப்பின்)


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (Common Service Centre) மேற்கண்ட ஆவணங்களுடன் அணுகவும்.


சேவை கட்டணம் - ரூ.  500 /- 


சலான் கட்டணம் - ரூ.  500 /-


பரிசீலனை செய்யும் அலுவலர்கள்

மாவட்ட வருவாய் அலுவலர்
(District Revenue Officer)
காவல்துறை & வருவாய் துறை &
  தீயணைப்பு மற்றும் மீட்பு துறை
(Police/ Revenue/ Fire&Rescue Department)
மாவட்ட வருவாய் அலுவலர்
(District Revenue Officer)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments