Recent Posts

OAP - Old Age Pension - INDIRA GANDHI NATIONAL OLD AGE PENSION SCHEME - IGNOAPS - இந்திரா காந்தி முதியோர் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

இந்திரா காந்தி முதியோர் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



ஆதரவற்ற 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

தகுதிகள்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்
  • 60 வயது அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்


தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
    3. ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
    4. விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
    5. வங்கி கணக்கு புத்தகம்


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்



சேவை கட்டணம் - ரூ.  10 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

விண்ணப்பதாரருடைய நிரந்தர முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டம்(Taluk)

பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
தனி வட்டாச்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
(Special Tahsildar - Social Security Scheme)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments