Recent Posts

LEGAL HEIR CERTIFICATE - வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?

 வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?


வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றம் செய்ய, பத்திர பதிவு செய்ய, வாரிசு அடிப்படையில் ஓய்வூதியம், வேலை பெறுவதற்கு பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்படும்.


தேவைப்படும் ஆவணங்கள்


    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. இறந்தவரின் இறப்புக்கு முன்னர் அவர் வழக்கமாக வசித்த முகவரி சான்று
    3. விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம்
    4. இறந்தவரின் இறப்பு சான்றிதழ்
    5. அனைத்து தகுதியான வாரிசுகளின் ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் அல்லது டி.சி அல்லது என்.பி.ஆர் அல்லது பணியாளர் சேவை பதிவு அல்லது சாதிச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை
    6. பெற்றோர் இருவரின் இறப்பு சான்றிதழ் (for Major Children Category)
    7. வாரிசுகளுடனான உறவை நிரூபிக்க மாண்புமிகு சிவில் நீதிமன்றம் வழங்கிய பாதுகாவலர் உத்தரவு (For Guardian Category)
    8. சட்டப்பூர்வமாக தத்தெடுத்தற்கான ஆவண ஆதாரம் (For Adopted Son/Daughter)


விண்ணப்பிக்கும் முறை

COMMON SERVICE CENTRE

  1. அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (Common Service Centre) அணுகவும்
  2. நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்க CITIZEN PORTAL-ஐ பயன்படுத்தவும்


சேவை கட்டணம் - ரூ.  60 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

இறந்தவரின் இறப்புக்கு முன்னர் அவர் வழக்கமாக வசித்த முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டத்தில் (Taluk) பரிசீலிக்கப்படும்.


பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
தலைமையிடத்து துணை வட்டாச்சியர்
(Head Quarter Deputy Tahsildar)
வட்டாச்சியர்
(Tahsildar)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments