Recent Posts

ECONOMICALLY WEAKER SECTIONS(INCOME & ASSETS) CERTIFICATE - பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பு (வருமானம் மற்றும் சொத்து) சான்றிதழ் பெறுவது எப்படி?

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பு  (வருமானம் மற்றும் சொத்து) சான்றிதழ் பெறுவது எப்படி?


தகுதிகள்

  • இந்த சான்றிதழை FC, OC வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • அனைத்து விதமான வழிகளில் (ஊதியம், விவசாயம் , வணிகம், தொழில் மற்றும் இதர வருமானம்) ஈட்டுகின்ற குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். மனுதாரரால் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டின் வருமானமாக இருக்க வேண்டும்.
  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான  இடஒதுக்கீடு பெறுபவருகான குடும்பம் என்பது இடஒதுக்கீடு கோருபவர் , அவரது பெற்றோர், 18 வயதுக்குட்பட்ட சகோதர/சகோதிரிகள், மனைவி/கணவர், 18 வயதுக்குட்பட்ட மகன்/மகள் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும்.


தகுதி பெறாதவர்கள்

  • ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு அதிகமாக விவசாய நிலத்தை உடையவர்கள்
  • 1000 சதுர அடி மற்றும் அதற்கு அதிகமாக சொந்த வீடு உடையவர்கள்
  • நகராட்சி பகுதிகளில் 900 சதுர அடி (100 சதுர யார்டுகள்) மற்றும் அதற்கு அதிகமாக வீட்டுமனை உடையவர்கள்
  • நகராட்சி அல்லாத பகுதிகளில் 1800 சதுர அடி (200 சதுர யார்டுகள்) மற்றும் அதற்கு அதிகமாக வீட்டுமனை உடையவர்கள்


தேவைப்படும் இடங்கள்

  • இந்த சான்றிதழ் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க அல்லது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை (10% இடஒதுக்கீடு) பெறுவதற்காக மட்டுமே


தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. முகவரி சான்று
    3. குடும்ப உறுப்பினர்களுடைய சொத்து விவரங்கள் (நிலம், வீடு  போன்றவை)
    4. குடும்ப உறுப்பினர்களுடைய ஊதிய சான்று (PAYSLIP, வருமான சான்றிதழ் போன்றவை)
    5. குடும்ப உறுப்பினர்களுடைய PAN அட்டை
    6. விண்ணப்பதாரரின் சுய உறுதிமொழி படிவம்
    7. பிற ஆவணங்கள்


விண்ணப்பிக்கும் முறை


  1. அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTER) அணுகவும்
  2. நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்க CITIZEN PORTAL-ஐ பயன்படுத்தவும்


சேவை கட்டணம் - ரூ.  60 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

  • நிரந்தர முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டம்(Taluk)


பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
மண்டல துணை வட்டாச்சியர்
(Zonal Deputy Tahsildar)
வட்டாச்சியர்
(Tahsildar)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

***

Comments