இ-அடங்கல் - விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் இ-அடங்கல் கைப்பேசி செயலி
உழவர் இ-அடங்கல் செயலியை உபயோகிக்கும் முறை:
1. GOOGLE PLAY STORE-இல் சென்று உழவர் இ-அடங்கல் என்ற செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த பின் தங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் OTP எண் வரும் (இதற்கு முன் வருவாய்த்துறையில் சான்றிதழ்கள், பட்டா அல்லது பிற திட்டங்களில் பயன்பெறுவதற்காக CAN எண் பதிவு செய்து இருந்தால் அந்த கைபேசி எண்ணிற்கே தற்போதும் OTP எண் வரும். OTP எண் வரவில்லை என்றாலோ, நாளது தேதி வரை CAN எண் பெறவில்லை என்றாலோ அருகிலுள்ள இ-சேவை மையத்திற்கு சென்று தங்களது கைபேசி எண்ணை கொடுத்து CAN எண் புதிதாக பெறலாம்).
3. OTP எண் வந்ததும் அதனை பதிவு செய்து இ-அடங்கல் செயலியில் உள் நுழையலாம்.
4. உள் நுழைந்ததும் CAN எண்ணை தேர்வு செய்து FARMER DETAILS என்ற OPTION-இல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
5. பின் LAND ENTRY என்ற OPTION-இல் சென்று தங்கள் பட்டா எண், புல எண் மற்றும் உட்பிரிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
6. பின் CROP ENTRY என்ற OPTION-இல் சென்று தங்கள் நிலத்தின் பரப்பு, சாகுபடி செய்த பரப்பு மற்றும் சாகுபடி செய்யப்படும் பயிர் குறித்த விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
7. CROP ENTRY IMAGE என்ற OPTION-இல் சென்று விவசாயப் பயிர்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
8. பயிர் சேதம் அடையும் பட்சத்தில் RESOWN என்ற OPTION-இல் பதிவிடுதலின் மூலம் மீண்டும் பயிர் குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்ய இயலும்.
உழவர் இ-அடங்கல் இணையதளம்
மேலும் விவசாயிகள் குடிமக்கள் போர்டல் (CITIZEN LOGIN) https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணைய பக்கத்தில் பயனர் சொல் மற்றும் கடவு சொல்லை கொடுத்து உள்நுழைந்து பின்னர் CAN எண்ணை பதிவு செய்து தங்கள் விவரம், நிலத்தின் விவரம் மற்றும் பயிரின் விவரம் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் இ-அடங்கல் அறிக்கைளை நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உழவர் இ-அடங்கல் இணையதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்:
1. PROFILE இல் குடிமக்கள் கணக்கு எண் (CAN NUMBER) அல்லது தொலைபேசி எண்ணை கொடுப்பதன் மூலம் விடுபட்ட விவசாயின் விவரங்களை பதிவு செய்யலாம். மற்ற விவரங்கள் குடிமக்கள் கணக்கு எண் மூலம் எடுத்துக்கொள்ளப்படும்.
2. நில விவரங்களின் பதிவு (LAND ENTRY) என்ற இணைப்பில் மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பிரிவு எண், பட்டா எண், உரிமையாளரின் பெயர் (பட்டாவில் உள்ளது போல் குறிப்பிடவும்) போன்ற நிலத்தின் விவரங்களை உள்ளிடவும்.
3. பயிர் விவரங்களின் பதிவு (CROP ENTRY) என்ற இணைப்பில் பயிரின் வகை, நீர்ப்பாசன ஆதாரம், உரிமையாளர் பெயர், சாகுபடி முறை, பயிரிடும் பரப்பு, விதைப்பு நாள் போன்ற பயிரின் விவரங்களை உள்ளிடவும்.
4. விதைப்பு நோக்கம் (INTENDED SOWING) என்ற இணைப்பில் விவசாயிகள் வரவிருக்கும் பருவத்தில் விதைக்கும் பயிரின் விவரத்தை உள்ளிடவும் (பயிர் காப்பீட்டு நோக்கத்திற்க்காக மட்டும்).
5. நிலத்தின் காப்பீடு (LAND INSURANCE) என்ற இணைப்பில் மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பிரிவு எண், காப்பீட்டு நிறுவனம், காப்பீட்டு எண், காப்பீடு தொகை, காப்பீடு நிலப்பரப்பு போன்ற பயிர் காப்பீடு விவரங்களை உள்ளிடவும்.
மேலும் இ-அடங்கல் பயிரின் விவரங்களை பதிவு செய்ய அருகிலுள்ள இ-சேவை மையங்களை (CSC) அணுகி பயன்பெறலாம்.
---
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks