Dr. MUTHULAKSHMI REDDY AMMAIYAR NINAIVU INTERCASTE MARRIAGE ASSISTANCE SCHEME - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் விண்ணப்பதாரராக மனைவி மற்றும் கணவன் இருக்க வேண்டும். திருமண நாளிலிருந்து இரண்டு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கு கலப்பு திருமணம் என்பது SC/ST வகுப்புடன் மற்ற வகுப்பினர் திருமணம் செய்து கொள்வது என குறிப்பிடப்படுகிறது.
பயன்கள்
- மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தம்பதியருக்கு ரூ.25,000/-க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.
- மணமகள் பட்ட படிப்பு / பட்டய படிப்பு முடித்திருந்தால் தம்பதியருக்கு ரூ.50,000/-க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.
தேவையான தகுதிகள்
- மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்
- தம்பதியினர் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும்
- வருமான உச்சவரம்பு கிடையாது
- மணமகள் 18 வயதும் மணமகன் 21 வயதும் திருமண நாளன்று பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
- அரசு பணியில் இருக்க கூடாது
தேவையான சான்றுகள்
- திருமண அழைப்பிதல் (அ) திருமண பதிவுச் சான்றிதழ்
- மணமக்களின் சாதிச் சான்றிதழ்
- குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்
- மணமக்களின் மாற்று சான்றிதழ் (TC) அல்லது பிறப்பு சான்றிதழ்
- வங்கி கணக்கு முதல் பக்கம்
- மணமக்கள் பட்டம் பெற்றவராயின் அதற்கான சான்று (Provisional & Convocation)
- மணமகள் மற்றும் மணமகன் புகைப்படங்கள்
- கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
- மணமகள் மற்றும் மணமகனுடைய ஆதார் கார்டு
- மேலும் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படின் (இணைப்பு ஒப்புதல் பத்திரம், மணமகள், மணமகன், சாட்சிகள் வாக்குமூலம், இருவருக்கும் முதல் திருமணத்திற்கான சான்று (V.A.O), உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெறவில்லை என சான்று (V.A.O))
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks