Recent Posts

Disability Pension - INDIRA GANDHI NATIONAL DISABLED PENSION SCHEME - IGNDPS - இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். கீழ்கண்ட வகையை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • பல்வகை குறைபாடு / Multiple Disabilities
  • கை கால் இயக்க குறைபாடு / Locomotor disability
  • அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் / Acid Attack Victims
  • மூளை முடக்கு வாத பாதிப்பு / Cerebral Palsy
  • தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் / Leprosy cured persons
  • தசை சிதைவு நோய் / Muscular Dystrophy
  • குள்ளத்தன்மை / Dwarfism
  • கண் பார்வையின்மை / Blindness
  • குறை பார்வையின்மை / Low-vision
  • காது கேளாமை / Deaf (Hearing impairment)
  • பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு / Speech and Language Disability
  • அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்) / Intellectual disability
  • புற உலக சிந்தனையற்றவர் / Autism spectrum disorder
  • குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு / Specific Learning Disabilities
  • மனநோய் / Mental illness
  • நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு / Chronic neurological conditions
  • திசு பண்முகக் கடினமாதல் / Multiple Sclerosis
  • நடுக்கு வாதம் / Parkinson's disease
  • இரத்த அழிவு சோகை / Thalassemia 
  • இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு / Haemophilia 
  • அரிவாளனு இரத்த சோகை / Sickle cell disease
  • செவித்திறன் குறைபாடு / Hard of hearing (Hearing impairment)

தகுதிகள்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.  
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • ஊனம் நிலை 80% மற்றும் அதற்கு மேல் இருத்தல்  வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. விண்ணப்பதாரர் புகைப்படம்
    2. குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
    3. ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
    4. விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
    5. தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை
    6. வங்கி கணக்கு புத்தகம்


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்


சேவை கட்டணம் - ரூ.  10 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

விண்ணப்பதாரருடைய நிரந்தர முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டம்(Taluk)

பரிசீலனை செய்யும் அலுவலர்கள்

கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
வருவாய் ஆய்வாளர்
(Revenue Inspector)
தனி வட்டாச்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
(Special Tahsildar - Social Security Scheme)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments