CHIEF MINISTER'S GIRL CHILD PROTECTION SCHEME II - முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் II - விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - II - விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பெண் குழந்தைகளை பெற்ற ஏழ்மையான பெற்றோர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் குழந்தைகளை பெற்ற இலங்கை தமிழ் அகதிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் (குழந்தையின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி தமிழ்நாட்டில் 10 வருடம் அல்லது அதற்குமேல் குடியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும்).
பயன்கள்
- ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.25000/- டெபாசிட் செய்து பத்திரமாக வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்தல் வேண்டும்
- முதல் பெண்குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தால் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.25000/- டெபாசிட் செய்து பத்திரமாக வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்தல் வேண்டும்
- குழந்தையின் படிப்பு செலவிற்கு மாதம் ரூ.150/- வீதம் பெண் குழந்தைக்கு 5 வயது முடிவடைந்து 6 வயது முதல் 20 வயது வரை வழங்கப்படும்
- முதிர்வுத்தொகை குழந்தை 10-ஆம் வகுப்பு படித்து அரசு தேர்வு எழுதினால் மட்டுமே வழங்கப்படும்
தேவையான தகுதிகள்
- தமிழ்நாட்டில் 10 வருடம் அல்லது அதற்குமேல் குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- உயிருடன் உள்ள ஆண் வாரிசு யாரும் இருக்க கூடாது. ஆண் குழந்தையை எதிர்காலத்திலும் தத்து எடுக்க கூடாது
- தாய் அல்லது தந்தை கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க வேண்டும். கருத்தடை அறுவை சிகிச்சை 35 வயதுக்குள் செய்துகொள்ள வேண்டும்.
- மணமகள் 18 வயதும் மணமகன் 21 வயதும் திருமண நாளன்று பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
- ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்
தேவையான சான்றுகள்
- சாதிச் சான்றிதழ்
- இருப்பிட சான்றிதழ்
- தாயின் வயது சான்றிதழ்
- தந்தையின் வயது சான்றிதழ்
- முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
- இரண்டாவது குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
- அரசு மருத்துவமனையிலிருந்து பெற்ற கருத்தடை சான்றிதழ்
- வருவாய்த்துறையிலிருந்து பெற்ற ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- குடும்ப புகைப்படம்
- அடையாள சான்று
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks